Thursday, October 8, 2020

திருடன் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை இரவு 8 மணியளவில் அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடா்ந்து எழும்பூா் காவல் துறையினருக்கு இது தொடா்பாக தகவல் தொிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து, விரைந்து வந்த காவல் துறையினா் படுகாயமடைந்த இருவரையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவல் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் (கதையின் நாயகன்) பிர்லா (வயது 25),. மேலும் வெட்ட பட்ட பெண் (கதையின் நாயகி) சுஜாதா என்கிற சுஜி (வயது 18). இருவரும் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் எதிரில் அமைந்து உள்ள பிருந்தாவனம் நகரில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவா்களுக்குள் பழக்கம் இருந்ததாகவும், இருவரும் அடிக்கடி ரயில் நிலையத்தில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் துறையினா் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அணைத்து முன்னணி நாளிதழ்களிலும் செய்தி வந்ததை கண்டு அழகு சுந்தரம் (பிர்லாவின் உயிர் நண்பன்) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருந்த பிர்லாவை சந்திக்க விரைந்தான். மருத்துவமனை முழுவதும் தேடிய அழகு சுந்தரம் கண்ணில் பிர்லா தென்படவில்லை. பிறகு அங்கு இருந்த நர்ஸ்யிடம் விசாரித்த போதுதான் தெரிந்தது. வரும் வழியிலே பிர்லா இறந்துவிட்டான் அவன் உடல் பிணவறையில் வைக்க பட்டுள்ளதை என்பதை அறிந்த உடன் கதறினான் அழகு. அங்கு இருந்த அனைவரும் அழகுவின் அழுகுரலை கேட்டு மனமுறுகினர். அழகு அவன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து பிர்லாவின் உடலை அவன் வீட்டுக்கு எடுத்து சென்றான். பிர்லாவின் உடலை காண நகர் மக்கள் அனைவரும் கூடி இருந்தனர். பிர்லாவின் உடல் அந்த தெருவில் நுழைந்த உடன் மக்கள் கூட்டமாக ஒப்பாரி வைத்து கொண்டு இருந்தனர். பிர்லா மேல் மிகந்த பாசத்தில் இருந்த மக்கள் ஆம்புலன்ஸ் சூழுந்து கொண்டு கதறினார். பிர்லா ஏரியா மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் போய் நிற்பவனாக இருந்துள்ளான். பிர்லாவின் மறைவு அந்த மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. சில வருடங்கள் முன்... சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து, அவரிடம் சுமார் 4 கிலோ 24 கேரட் தங்க கட்டிகளை ஆவணங்கள் சரியாக இல்லை என கூறி பறிமுதல் செய்து உரிய அவனத்துடன் தங்கள் அலுவலகம் வந்து சமிர்ப்பித்து எடுத்து செல்லுமாறு கூறிவிட்டு சென்றனர். அந்த நபரின் பெயர் சத்யா, ஒரு நகை கடையின் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். அவர் முதலாளிக்கு (சேகர்) உடனடியாக தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்தார். உடனே அந்த நகை கடையின் உரிமையாளர் விமான நிலையம் சுங்க அதிகாரிகள் இடம் விசாரித்த போதுதான் தெரிந்தது. தங்க கட்டிகளை யாரோ சுங்க அதிகாரிகள் போல் வேடமிட்டு திருடியிருப்பது தெரியவந்தது. நகை கடையின் உரிமையாளர் (நடிகர் ராதா ரவி) மிகந்த கோபத்துடன் நகைகளை பறி கொடுத்த மேனேஜரை சத்யாவை (நடிகர் மயில்சாமி) தீட்டி தீர்த்துவிட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், மேனேஜர் சத்யா அளித்த வாக்குமூலத்தில் அவரிடம் நகைகளை திருடியது நிச்சயமாக சுங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக சொன்னார். ஏன் என்றால் வந்தவர்கள் அனைவரும் பார்க்க நன்கு படித்தவர்கள் போல் இருந்தனர். அதுவும் அவர்கள் சுங்க அதிகாரி ID கார்டு வைத்து இருந்தனர். எனவே இது சுங்க அதிகாரிகள் செய்த சதியாகத்தான் இருக்கும் என்ற கூறியவுடன். காவல் ஆய்வாளர் பரதன் (நடிகர் ரியாஸ் கான்) சத்யாவை விமான நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்ததை யாவும் நடித்து காட்ட சொன்னார். அதை செய்து காட்டிய பின் அடையாளம் காட்ட விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்க யாரும் இல்லாததால் எந்த தகவலும் தெரியாமல் தடுமாறினார். நகை கடையின் உரிமையாளர் சேகரின் தம்பி ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் காவல் துறைக்கு அரசியல் ரீதியாக மிகந்த அழுத்தம் இருந்தது. காவல் ஆய்வாளர் பரதன் விசாரணையை பல கட்டங்களாக நகர்த்தினார்

0 comments: