இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களின் ஒரு சிறுதொகுப்பு . சென்னை கோடம்பாக்கம் ரயில்வே குடியிருப்பில் 24 வயதுள்ள பிர்லா (நடிகர் ஹரிஷ் கல்யாண்) தனது அம்மா செல்வியுடன் ( நடிகை ராதிகா) வசித்து வருகிறான். பிர்லாவின் தந்தை அவன் சிறு வயதில் காலஞ்சென்றதால் அவனது அம்மாவிற்கு அவருடைய ரயில்வே பனி கருணையின் அடிப்படையில் கிடைத்தது. இப்பொது கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்யில் pointsman ஆக பணிபுரிந்து வருகிறார். பிர்லா மிகவும் கோவக்காரன், எடுத்த எடுப்பில் அடித்துவிட்டுத்தான் பேசக்கூடிய நபர். முதல் முறையாக பிர்லா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததற்காக, செல்வி அவனின் நண்பர்கள் முன்னிலையில் செருப்பால் அடித்த காரணத்திற்காக, தனது அம்மாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறான். பிர்லா உயிருக்கு உயிராக நினைக்கும் ஒரே ஒரு ஆள், அவன் மாமா சேதுபதி ( நடிகர் விஜய் சேதுபதி) சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பனி புரிந்து வருகிறார். பிர்லாவின் நெருங்கிய நண்பன் சரவணன், அவன் வீட்டில் இருப்பதை விட பிர்லாவுடன் இருப்பதே அதிகம். அது மட்டுமில்லாமல் தினேஷ், சத்யா, லாரன்ஸ் போன்றவர்களும் பிர்லாவின் நண்பர்கள். கதை ஒரு நாள் மாலை நான்கு மணி அளவில் பிர்லாவும், அவன் நண்பர்களும் கூட்டமாக கோடம்பாக்கத்தில் இருந்து புறப்படும் ரயிலில் அவசர அவசரமாக கையில் பேட், ஸ்டம்ப் மற்றும் இரும்பு கம்பியை கொண்டு ஓடும் ரயிலில் ஏறினர். ரயில் மாம்பழம் வந்த அடைந்ததும் ரன்னிங்கியில் எகிறி குதித்து ரயில்வே மேம்பாலம் மேல் ஏறி ஓடினர். இதை கவனித்த மற்ற ரயில் பயணிகள், இவர்கள் வேகமா கத்திக்கொண்டு ஓடுவதை கண்டு பதப்பதைத்து போனார்கள். பிர்லாவும் அவன் நண்பர்களும் ரங்கநாதன் தெரு வழியாக வேகமாக ஓடி அதன் பக்கத்திலுள்ள சத்யா பஜாரில் அமைந்துள்ள கடை ஒன்றை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். அப்போது மற்ற கடைக் காரர்களுக்கும் இவர்களுக்கும் மிகப்பெரிய அடி தடி கலவரம் போல் நடந்தது. அதில் பிர்லா அருகில் இருந்த கண்ணாடியை எடுத்து கடை உரிமையாளரின் மண்டையில் அடித்தான். அந்த நபரின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அங்கேயிருந்த பிர்லாவும் அவன் நண்பர்களும் சிதறி ஓடி தப்பித்துவிட்டனர் . மாலை ஆறு மணி அளவில் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அடியில் சிதறி ஓடிய அனைவரும் சந்தித்து கொண்டனர். அப்போது பிர்லாவின் நண்பன் தினேஷ் ஓடிவந்து சரவணன் கடைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டான். அவனை கடைக்காரர்கள் அடித்து கிழித்துவிட்டு போலீசில் ஒப்படைத்துவிட்டனர், இப்போது நமது காலனி முழுதும் போலீஸ் சுற்றி வளைத்துவிட்டது, அதுமட்டுமில்லாமல் பிர்லாவின் அம்மாவிடம் விசாரிப்பதாக தினேஷ் சொல்லும்போதே அங்கு மறைந்து காவலர்கள், பிர்லாவை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். இரவு 7 மணிக்கு திநகர் காவல் நிலையத்தில் பிர்லாவின் மாமா (வக்கீல்) சேதுபதியும் அவன் அம்மா செல்வியும், காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பிர்லாவையும் சரவணனையும் போலீசார் அடித்து தொங்க விட்டு இருப்பதை கண்டு வக்கீல் சேதுபதி கோவமாக அங்கு இருந்தவர்களை திட்டினார். சத்தத்தை கேட்டு வாசலில் காத்து கொண்டுயிருந்த பிர்லாவின் அம்மா உள்ளே ஓடிவந்து பிர்லாவின் நிலை கண்டு மயங்கி விழுந்தார். அப்பொழுது அங்கு இருந்த துணை காவல் ஆய்வாளர் அவருக்கு தண்ணி கொடுத்து உதவினார். மேலும் வக்கீல் சேதுபதியை தெரியும் என்பதால் முதல் அறிக்கை இன்னும் பதிவு செய்யவில்லை, இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் சென்றுள்ளார் அவர் திரும்பி வருவதற்குள் போய் அந்த கடை உரிமையாளரிடம் காம்ப்ரமைஸ் செய்து கேஸ் வாபஸ் வாங்கு செய்யுமாறு அறிவுறித்தினார். செல்வியும், சேதுபதியும் அவர்கள் வந்த ஆட்டோவில் அந்த கடை உரிமையாளரின் வீட்டுக்கு சென்று. அந்த கடை உரிமையாளரின் காலில் விழுந்து செல்வி மன்னிப்பு கேட்டதால், கேஸ் வாபஸ் வாங்க சம்மதித்தார். கையோடு அவர்களையும் போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் அவர்களை உள்ளே அழைக்காமல், வெளியிலே காக்க வைத்ததார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அந்த கடை உரிமையாளரை மட்டும் உள்ளே அழைத்து. எதற்கு கேஸ் கொடுத்துட்டு இப்போ வாபஸ் வாங்குறயா என்று சற்று அதட்டிவிட்டு, வாபஸ் கடிதத்தை எழுத்தாளரிடம் எழுதி தந்துவிட்டு, அப்படியே கவனித்துவிட்டு செல்லுமாறு கூறினார். அப்போது வெளியில் இருந்த சேதுபதி கேஸ் வாபஸ் பெற்றதால் பசங்கள அனுப்பி விடுமாறு கூறினார். அதற்கு அவர்களுக்கு சற்று பாடம் எடுக்க வேண்டியுள்ளது என்றும், சிறிது நேரத்தில் அனுப்புவதாக கூறி சேதுபதியை வெளியில் நிற்க உத்தரவிட்டார். காயங்களுடன் இருந்த சரவணாவும், பிர்லாவையும் அழைத்து ஒரு பேப்பரில் எழுத பட்டு இருந்த மன்னிப்பு வாக்கியங்களை படிக்க சொல்லிவிட்டு, அதனை வீடியோ எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டார். காயங்களுடன் வெளியே வந்த பிர்லாவை கண்டு செல்வி துடி துடித்து போனால், ஆனால் பிர்லா அவன் அம்மாவை கண்டும் காணாமலும், தனது மாமாவிடம் எதுவும் பேசாமலும் சரவணனுடன் வெளியில் இருந்த அவனது நண்பர்களின் ஆட்டோவில் ஏறினான். அப்போது பிர்லாவை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தார் ஆனால் கோவமாக இருந்த பிர்லாவை கண்டு, அவன் நண்பனிடம் சரக்கு வாங்க காசு கொடுத்து அனுப்பினார். ஜில் ஜில் வைன் ஷாப் பாரில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அருகில் குடித்து கொண்டு இருந்த ஒருவர் என்னப்பா தம்பி வீடியோ விட நேர்ல ஷோக்கா இருக்கப்பானு கூறினார். சரவணன் உடனே அந்த குடிகாரனின் மொபைல் எடுத்த பார்த்தால் பிர்லாவும் சரவணனும் காவல் ஆய்வாளரால் எடுக்க பட்ட மன்னிப்பு வீடியோ facebook , whatsapp யில் வைரல் ஆகி கொண்டு இருந்தது. வீடியோ பார்த்த பிர்லாவிற்கு தலைக்கு மேல் கோவம் ஏறியது, சரவணனும் அந்த இன்ஸ்பெக்டர் ஏதாவது பண்ணனும் பிர்லா என்று கோவத்தில் புலம்பி கொண்டு இருக்க. பிர்லா கையில் பீர் பாட்டிலுடன் எழுந்த ஆட்டோவை எடுடா என்று உரக்க கத்தினான். அனைவரும் ஆட்டோவில் திநகர் காவல் நிலையத்தை நோக்கி சென்றனர். அங்கு அந்த இன்ஸ்பெக்டர் வருகைக்காக வெளியில் காத்துக்கொண்டு இருந்தனர். சிறிது நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் வாகனம் காவல் நிலையத்தில் இருந்து வெளிய வந்தது. இவர்களும் ஆட்டோவில் பின் தொடர்ந்தனர். மாம்பழம் MADLEY SUBWAYயில் போலீஸ் வாகனத்தை மறைத்து நின்று. காரின் மேல் சர சரவென்று சரக்கு பாட்டில்களை வீசினர். அப்போது பிர்லா ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து அவன் பிடித்து கொண்டு இருந்த சிகரெட்டை கார் மீது வீசினான். வேகமாக கார் பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்து எரிந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வெளியே வருவதை கண்டு அனைவரும் சிரித்துக்கொண்டே அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் தப்பித்து விட்டார்கள். அடுத்த நாள் காலையில், நியூஸ் முழுதும் இன்ஸ்பெக்டரின் கொலை சம்பவத்தை பற்றித்தான், அணைத்து நாளிதழ்களும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி கொண்டு இருந்தன. அப்போது பிர்லாவின் மாமா சேதுபதி, ரயில்வே குடியிருப்பின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டுயிருந்த பிர்லாவை எழுப்பி அடேய் நீங்க ஏதாவது பண்ணிங்களடா, உண்மையா சொல்லுங்க என்றதும். பிர்லா எந்திரிச்சி செத்துட்டானா இல்லையா மாமா என்றான். இதை கேட்டு ஆடி போன சேதுபதி என்னடா இப்படி பண்ணிடீங்க அதுவும் இன்ஸ்பெக்டர் பொய் போட்டு இருக்கீங்க. இனி உங்கள வாழவிட மாட்டானுங்க என்றதும், நாங்கதான் பண்ணம்னு என்ன ஆதாரம் இருக்கு மாமா என்றான் சரவணன். அடேய் பண்ணாத ஒழுங்கா பண்ணாம மிச்சம் வெச்சிடிங்களேடா என்றார். என்ன மாமா சொல்ற என்ற பிர்லா வினவினான். அதற்கு சேதுபதி, டிரைவர் இறந்துவிட்டார், ஆனால் இன்ஸ்பெக்டர் 90 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கான்டா என்றதும். அனைவரையும் அலறி அடித்துக்கொண்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு உடனடியாக சென்றனர், அங்கு ICU பகுதியில் அனுமதிக்க பட்டு இருப்பதையும் இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காக வாசலில் இருப்பதையும் சரவணன் நோட்டமிட்டு வந்து கூறினான். உடனே தினேஷும், சத்யாவும் ஒருவரை ஒருவர் மாற்றி அடித்து கொள்ள ஆரம்பித்தனர். சரவணனுக்கு எதற்காக இவர்கள் அடித்து கொள்கிறார்கள் என்று புரியாமல் அவர்களை தடுக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தான். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் இவர்களை சண்டை போடுவதில் இருந்து தடுத்து இருவரையும் இரண்டு அடி அடித்துவிட்டு திரும்பினார். அதற்குள் அங்கு நர்ஸ் ஓடிவந்து டாக்டரை வேகமாக ICU விற்கு அழைத்து செல்ல பிர்லா கூல்லாக கண்ணாடியை மாட்டிக்கொண்டு ICU வாசலில் இருந்து வெளியில் வர சில நிமிடங்களில் அந்த இன்ஸ்பெக்டர் இறந்துவிட்டார் என்று பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் மேலதிகாரியிடம் உரையாடியதை கேட்டு நான்கு பேரும் மிகவும் திமிராக, தில்லாக வெளியில் வந்தனர். அடுத்த நாள் பிர்லாவும் சரவணன்னும் ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க, அப்போது ஒரு பெண் எதிரே கூட்ஸ் ரயில் வேகமாக வருவதை கவனிக்காமல் போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயல்கிறாள். பிர்லா வேகமாக ஓடிச்சென்று அவளை காப்பாற்றிவிட்டு, அவளது மொபைல் போனை பிடிங்கி உடைத்துவிட்டு எதுவும் பேசாமலே செல்கிறான். அப்போது அருகில் இருந்த சரவணனும் அந்த பெண்ணும் திகைத்து போய் நின்றனர். சில நாட்களுக்கு பிறகு பிர்லாவின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று சரவணன், அவர்கள் வீடு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். அப்போது பிர்லாவின் அம்மாவிற்கு வயிற்றில் கட்டி இருப்பதாக டாக்டர் கூறி விட்டனர். இதனை அறிந்து இத்தனை நாட்கள் பேசாமல் இருந்த பிர்லா அவன் அம்மாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு பேச தொடங்கிவிட்டான். பிறகு ஒரு நாள் அவன் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதுதான் அவனுக்கு தெரிந்தது அன்று காப்பாற்றிய பெண் அந்த மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். நாளைடைவில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. சில நாட்கள் கழித்து பிர்லாவின் எண்ணிற்கு வேறு ஒரு நம்பர்யில் இருந்து வாட்சப் மெசேஜ் வந்தது. அதில் பிர்லாவின் மாமா கொடூரமாக கொலை செய்யபடும் வீடியோ காட்சி இருந்ததை கண்டு அதிர்ந்து போனான். பிறகு ஒரு கரண்ட் லொகேஷன் வந்ததை கண்டு பிர்லா உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் அது MLA விநாயகம் இல்லமாக இருப்பதை கண்டு MLA விற்கும் தனது மாமாவின் கொலைக்கும் சம்பந்தம் இருப்பது போல் தோன்றியது. MLA வீடு வாசலில் இருந்து கத்தினான். சத்தத்தை கேட்டதும் மினிஸ்டர் சக்ரவர்த்தியின் பண்ணை வீடு. பிர்லாவிற்கு ஒன்றும் புரியாமல் குழம்பினான். ஒருவேளை தனது மாமாவை மினிஸ்டர் சக்ரவர்த்தி கொலை செய்து இருக்கலாம் என்று எண்ணி காம்பௌண்ட் சுவர் எகிறி குதித்து உள்ளே சென்று பார்த்தால் அங்கு சேதுபதியின் பைக் பார்க்கிங் செய்ய பட்டுள்ளதை கண்டு மினிஸ்டர்க்கும் அவன் மாமா கொலைக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதை உணர்ந்தான். அடுத்த நாள் சரவணனும் பிர்லாவும் மினிஸ்டர் சக்கரவர்த்தியை கடத்தி அவனை வியாசரிக்க தொணடங்கினர் அனல் மிஸ்டர் பிடி கொடுக்காமல் பேசியதால் என்னை ஏற்றி செல்லும் கூட்ஸ் வண்டியில்
திருடன் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை இரவு 8 மணியளவில் அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடா்ந்து எழும்பூா் காவல் துறையினருக்கு இது தொடா்பாக தகவல் தொிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து, விரைந்து வந்த காவல் துறையினா் படுகாயமடைந்த இருவரையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவல் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் (கதையின் நாயகன்) பிர்லா (வயது 25),. மேலும் வெட்ட பட்ட பெண் (கதையின் நாயகி) சுஜாதா என்கிற சுஜி (வயது 18). இருவரும் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் எதிரில் அமைந்து உள்ள பிருந்தாவனம் நகரில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவா்களுக்குள் பழக்கம் இருந்ததாகவும், இருவரும் அடிக்கடி ரயில் நிலையத்தில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் துறையினா் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அணைத்து முன்னணி நாளிதழ்களிலும் செய்தி வந்ததை கண்டு அழகு சுந்தரம் (பிர்லாவின் உயிர் நண்பன்) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருந்த பிர்லாவை சந்திக்க விரைந்தான். மருத்துவமனை முழுவதும் தேடிய அழகு சுந்தரம் கண்ணில் பிர்லா தென்படவில்லை. பிறகு அங்கு இருந்த நர்ஸ்யிடம் விசாரித்த போதுதான் தெரிந்தது. வரும் வழியிலே பிர்லா இறந்துவிட்டான் அவன் உடல் பிணவறையில் வைக்க பட்டுள்ளதை என்பதை அறிந்த உடன் கதறினான் அழகு. அங்கு இருந்த அனைவரும் அழகுவின் அழுகுரலை கேட்டு மனமுறுகினர். அழகு அவன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து பிர்லாவின் உடலை அவன் வீட்டுக்கு எடுத்து சென்றான். பிர்லாவின் உடலை காண நகர் மக்கள் அனைவரும் கூடி இருந்தனர். பிர்லாவின் உடல் அந்த தெருவில் நுழைந்த உடன் மக்கள் கூட்டமாக ஒப்பாரி வைத்து கொண்டு இருந்தனர். பிர்லா மேல் மிகந்த பாசத்தில் இருந்த மக்கள் ஆம்புலன்ஸ் சூழுந்து கொண்டு கதறினார். பிர்லா ஏரியா மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் போய் நிற்பவனாக இருந்துள்ளான். பிர்லாவின் மறைவு அந்த மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. சில வருடங்கள் முன்... சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து, அவரிடம் சுமார் 4 கிலோ 24 கேரட் தங்க கட்டிகளை ஆவணங்கள் சரியாக இல்லை என கூறி பறிமுதல் செய்து உரிய அவனத்துடன் தங்கள் அலுவலகம் வந்து சமிர்ப்பித்து எடுத்து செல்லுமாறு கூறிவிட்டு சென்றனர். அந்த நபரின் பெயர் சத்யா, ஒரு நகை கடையின் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். அவர் முதலாளிக்கு (சேகர்) உடனடியாக தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்தார். உடனே அந்த நகை கடையின் உரிமையாளர் விமான நிலையம் சுங்க அதிகாரிகள் இடம் விசாரித்த போதுதான் தெரிந்தது. தங்க கட்டிகளை யாரோ சுங்க அதிகாரிகள் போல் வேடமிட்டு திருடியிருப்பது தெரியவந்தது. நகை கடையின் உரிமையாளர் (நடிகர் ராதா ரவி) மிகந்த கோபத்துடன் நகைகளை பறி கொடுத்த மேனேஜரை சத்யாவை (நடிகர் மயில்சாமி) தீட்டி தீர்த்துவிட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், மேனேஜர் சத்யா அளித்த வாக்குமூலத்தில் அவரிடம் நகைகளை திருடியது நிச்சயமாக சுங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக சொன்னார். ஏன் என்றால் வந்தவர்கள் அனைவரும் பார்க்க நன்கு படித்தவர்கள் போல் இருந்தனர். அதுவும் அவர்கள் சுங்க அதிகாரி ID கார்டு வைத்து இருந்தனர். எனவே இது சுங்க அதிகாரிகள் செய்த சதியாகத்தான் இருக்கும் என்ற கூறியவுடன். காவல் ஆய்வாளர் பரதன் (நடிகர் ரியாஸ் கான்) சத்யாவை விமான நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்ததை யாவும் நடித்து காட்ட சொன்னார். அதை செய்து காட்டிய பின் அடையாளம் காட்ட விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்க யாரும் இல்லாததால் எந்த தகவலும் தெரியாமல் தடுமாறினார். நகை கடையின் உரிமையாளர் சேகரின் தம்பி ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் காவல் துறைக்கு அரசியல் ரீதியாக மிகந்த அழுத்தம் இருந்தது. காவல் ஆய்வாளர் பரதன் விசாரணையை பல கட்டங்களாக நகர்த்தினார்