"பிர்லா" செப்டம்பர் 6, 2005 மதியம் 12 மணியளவில் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்யில் தாம்பரம் நோக்கி புறப்பட தயாராக இருந்த புறநகர் ரயிலில் ஒரு இளைஞர் கூட்டம் மிகவும் வேகமாக கையில் கிரிக்கெட் பேட், மற்றும் ஸ்டம்ப்களை எடுத்துக்கொண்டு ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். மாம்பழம் ரயில் நிலையத்தில் முழுதாக ரயில் வந்தடையும் முன்னரே ரன்னிங்கில் குதித்துவிட்டு ரங்கநாதன் தெரு நோக்கி படிக்கட்டில் ஓடினர். வழியில் இருந்தவர்களை முட்டி, மோதி கொண்டு ஓடியதை கண்டு ஏதோ பெரிய சண்டை நிகழ போகிறது என்று அங்கு இருந்தவர்கள் கருதினர். வெறிகொண்டு ஓடிய கூட்டம் சத்யா பஜார்யில் நுழைந்து அங்கு உள்ள கடைகளை அடித்து நொறுக்கி கொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு இருந்த கடைக்காரர்களுக்கும் இந்த இளைஞர் கூட்டத்திற்கும் மிக பெரிய சண்டை ஒரு கலவரம் போல் ஆகிற்று. பிர்லா அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஒரு கடை உரிமையாளரின் மண்டையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். இதை கண்ட அந்த இளைஞர் கூட்டம் திசை தெரியாமல் சிதறி ஓடியது. பிர்லா கோடம்பாக்கம் நோக்கி செல்லும் ஒரு பேருந்தில் ஏறி ஒளிந்து கொண்டு தப்பி சென்று விட்டான். இரவு 7 மணிக்கு கோடம்பாக்கம் ரயில்வே பாலம் அடியில் பிர்லா மற்றும் வேறு சிலர் தண்ணி அடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சத்யா வேகமாக ஓடி வந்த மச்சான் நம்ம செல்வம் மாட்டிக்கிட்டான்டா, அவனை அடித்து தும்சம் பண்ணி இருக்காங்க, போலீஸ் ஸ்டேஷன்யில் கம்பிளைன்ட் வேற கொடுத்து இருக்காங்களாம் என்றதும். பிர்லா சரக்கை ராவாக குடித்துவிட்டு மச்சான் இந்த பிரச்சனைக்கு நான் தான காரணம் நானே போலிஸ் கிட்ட போய் சரண்யடைகிறேன் என்று சொல்ல. பிர்லா கொஞ்சம் பொறுமையா இருடா நம்ம வக்கீல் பாரதிக்கு கால் பண்ணி பேசிட்டு அப்புறம் ஒரு முடிவு எடுப்போம் என்ற போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் வேகமாக கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்தது. பாரதி நம்ம செல்வம் இன்னைக்கு நடந்த சண்டையில திநகர் போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான்டா எப்படியாச்சும் வெளிய கொண்டு வரணும் மச்ச என்று பிர்லா செல்போன்யில் பேசி கொண்டு இருந்தான். அப்போது மகேஷ் வேகமாக ஓடி வந்து பிர்லா உன் வீட்டுக்கு போலீஸ் வந்து இருக்குடா நம்ம QUARTERS முழுதும் ரவுண்டு பண்ணிட்டாங்க நான் பின்பக்கமா குதிச்சி ஓடி வந்துட்டேன் மொதல்ல இங்க இருந்து தப்பிச்சு போவோம் மாட்னா கஞ்சிதான் என்று எல்லாரும் வேகமாக கடற்கரை நோக்கி வந்து கொண்டு இருந்த ரயிலில் ஏறிக்கொண்டு தப்பித்து விட்டனர். போலீஸ் ரயில்வே QUARTERS முழுதும் சுற்றி வளைத்துவிட்டு, பிர்லாவின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். பிர்லாவின் தந்தை அவன் சிறு வயதிலே இறந்து விட்டார் அவன் அம்மா செல்வி ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். மகனை விட்டுக்கொடுக்காத அம்மாவாக தன் பிள்ளை பற்றி நல்ல விதமாக சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கோபத்துடன் தோ பாருமா நாங்க உன் புள்ள புராணம்ல கேட்க வரல உன் புள்ளையோட பிரென்ட் சத்யா பஜார்யில் சட்ட வாங்க போய்யிருக்கான் , அங்க பேரம் பேசி ஏதோ வாய் தகராறு ஆகியிருக்கு உடனே அவன் உன் பையன கூட்டிட்டு போய் கடைக்காரன் மண்டைய ஒடச்சிட்டு வந்துஇருக்கான். ஒழுங்கா நீயே அவனை இப்போ எங்ககூட அனுப்பிடு இல்லனா நாங்களா புடிச்சுசோம் அவ்வளவுதான் என்று மிரட்டி விட்டு சென்றனர். இரவு ஒன்பது மணிக்கு பிர்லா அவன் தாயார் மற்றும் வக்கீல் பாரதியுடன் திநகர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தான். பிர்லாவை ரிமாண்ட் செய்து விட்டனர். வக்கீல் பாரதியும் பிர்லா அம்மாவும் அந்த கடைக்காரன் அட்ரஸ் வாங்கிக்கொண்டு compromise செய்வதற்காக சென்றனர். அங்கு பிர்லா அம்மா அந்த கடைக்காரரின் கால்களில் விழுந்து மன்றாடினார். அவளது மகன் 12 ஆம் வகுப்பு படிப்பதாகவும் அவனை விடிவிக்காவிட்டால் அவனது வாழ்கை பாழாகிவிடும் என்றும் கடைக்கு சேதமான பொருள்களின் செலவை தானே ஏற்பததாக வாக்கு கொடுத்துவிட்டு அந்த கடை உரிமையாளருடன் சரியாக 11 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்து கேஸ் வாபஸ் வாங்க செய்தார். ஆனால் செல்வத்தை தாக்கியது போலவே பிர்லாவையும் காவல் துறையினர் கடுமையாக தாக்கி இருந்தனர். அங்கு இருந்த இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் பிர்லாவை மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். காவல் நிலையத்திற்கு வெளியே வந்ததும், தனது அம்மாவை கூட பார்க்காமல் வெளியில் ஆட்டோவில் காத்துக்கொண்டு இருந்த நண்பர்களுடன் சென்று விட்டான். வளசரவாக்கம் ஜில் ஜில் வைன்ஸ் பாரில் அமர்ந்து செல்வம் சரக்கை தண்ணீர் ஊற்றாமல் ராவாக குடித்தான். அவன் நண்பர்கள் எல்லாரும் அவனை சமாதானம் செய்தனர். ஆனால் அவனால் காவல் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவத்தை மறக்க எழவில்லை, பிர்லா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். எல்லாரும் பிர்லாவின் மௌனத்தை கண்டு அஞ்சினர். செல்வம் புலம்பி கொண்டு இருந்தான். காவல் நிலையத்தில் வந்தவன் போனவன் எல்லாம் தன்னை அடித்ததாகவும் தனக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும் புலம்பி கொண்டு இருந்தான். அது மட்டும் இல்லாமல் அந்த இன்ஸ்பெக்டர் அறிவுரை என்ற பெயரில் அவ்வளவு கீழ்த்தனமாக பேசியதை நினைத்து நினைத்து அங்கு இருந்த பாட்டில் எல்லாத்தையும் தூக்கி அடித்து கொண்டு இருந்தான். அமைதியாக இருந்த பிர்லா கையில் பீர் பாட்டில்லுடன் எழுந்த ஆட்டோவை எடுடா என்று உரக்க கத்தினான். அனைவரும் ஆட்டோவில் திநகர் காவல் நிலையத்தை நோக்கி சென்றனர். அங்கு அந்த இன்ஸ்பெக்டர் வருகைக்காக வெளியில் காத்துக்கொண்டு இருந்தனர். மகேஷ் பிர்லாவை வீட்டுக்கு போகலாம்டா பிரச்சனை எதுவும் இப்போது பண்ணவேண்டா என்று மன்றாடிக்கொண்டு இருந்தான். அப்போது இன்ஸ்பெக்டர் வாகனம் காவல் நிலையத்தில் இருந்து வெளிய வந்தது. இவர்களும் ஆட்டோவில் பின் தொடர்ந்தனர். மாம்பழம் MADLEY SUBWAYயில் போலீஸ் வாகனத்தை மறைத்து நின்று. சரக்கு பாட்டில்களில் திரியை வைத்து கொளுத்தி வீசினர். கார் வேகமாக பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டரை கண்டு செல்வம் சற்று பதறினான். ஆனால் உடைந்த பீர் பாட்டில் வைத்து பிர்லா சரமாரியாக குத்தினான். அதே இடத்தில இன்ஸ்பெக்டர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தபோவதை கண்டு அனைவரும் சிரித்துக்கொண்டே அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் தப்பித்து விட்டார்கள். அடுத்த நாள் காலையில் நியூஸ் முழுதும் இன்ஸ்பெக்டரின் கொலை சம்பவத்தை பற்றித்தான், அணைத்து நாளிதழ்களும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பி கொண்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் ரயில்வே காலனி மொட்டைமாடியில் உறங்கி கொண்டு இருந்தனர். அப்போது வக்கீல் பாரதி வந்து இவர்களை எழுப்பி அடேய் நீங்க ஏதாவது பண்ணிங்களடா, உண்மையா சொல்லுங்க என்றதும். பிர்லா எந்திரிச்சி செத்துட்டானா இல்லையா என்றான். அதர்க்கு பாரதி இன்ஸ்பெக்டர் இறந்துவிட்டார், ஆனால் டிரைவர் தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்கான்டா அவன் மட்டும் வாய தொறந்தான் நீங்க எல்லாரும் காலி என்று பாரதி சொல்ல அனைவரையும் அலறி அடித்துக்கொண்டு எழுந்தனர். கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு உடனடியாக சென்றனர், அங்கு ICU பகுதியில் அனுமதிக்க பட்டு இருப்பதையும் இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காக வாசலில் இருப்பதையும் செல்வம் நோட்டமிட்டு வந்து கூறினான். உடனே மகேஷும் சத்யாவும் ஒருவரை ஒருவர் மாற்றி அடித்து கொள்ள ஆரம்பித்தனர். செல்வம் அவர்களை தடுக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தான். அங்கு இருந்த காவலர்கள் இவர்களை சண்டை போடுவதில் இருந்து தடுத்து இருவரையும் இரண்டு அடி அடித்துவிட்டு திரும்பினார். அதற்குள் அங்கு நர்ஸ் ஓடிவந்து டாக்டரை வேகமாக ICU விற்கு அழைத்து செல்ல பிர்லா கூல்லாக கண்ணாடியை மாட்டிக்கொண்டு ICU வாசலில் இருந்து வெளியில் வர சில நிமிடங்களில் அந்த கான்ஸ்டபிள் இறந்துவிட்டார் என்று பாதுகாப்புக்கு இருந்த காவலர் மேலதிகாரியிடம் உரையாடியதை கேட்டு ஐந்து பேரும் நக்கலாக, மிகவும் திமிராக, தில்லாக வெளியில் வந்தனர். நாட்கள் நகர்ந்து செல்ல, 12வது பரீட்சை முடிவுகள் வெளியாகின. அதில் பிர்லா மட்டும் பாஸ் ஆகிவிட்டான் ஆனால் பிர்லாவின் நண்பர்கள் மற்ற யாரும் தேர்ச்சிபெறவில்லை. பிர்லாவின் அம்மா செல்வி அவர்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் அனைவருக்கும் பால்பாயாசம் செய்து கொடுத்து கொண்டாடினர். ஆனால் பிர்லாவிற்கு மேல படிப்பதற்கு விருப்பம் இல்லை அருகில் உள்ள கார் ஷெட்யில் தனது நண்பர்களுடன் வேளைக்கு போக போவதாகவும் கூறினான். இதனால் கோவம் அடைந்த அவன் தாய் அந்த பாயாசம் எல்லாத்தையும் தூக்கி கீழே போட்டுவிட்டு அழுதுக்கொண்டே ரூமில் சென்று கதுவை சாத்திக்கொண்டார். ஆனால் எதற்கும் சட்டை பண்ணாமல் சாவா போறியா? இன்னைக்கு சனிக்கிழமை அதனால நாளைக்கு சாவு, இல்லனா சனி போன தனியா போகாதுனு சொல்லுவாங்க போறபோக்குல எங்களையும் தூக்கிட போற என்றதும். அவன் அம்மா கதவை திறந்து வெளிய வந்து அவ்வளவு சீக்கிரம்லாம் சாக மாட்டேன் டா, உன்ன ஒரு ஆளா மாற்றமா நான் பாடைக்கு போகமாட்டேன். உன் மாமன் உன்ன வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கான் என்றதும் சற்று அமைதியாக வீடு வாசலில் காத்துக்கொண்டு இருந்த செல்வத்துடன் தனது மாமா வாங்கி தந்த யமஹா RX 100 வண்டியில் வெளியே கிளம்பினான். பிர்லாவிற்கு தனது மாமா மீது மிகுந்த மரியாதை, தனது மாமா ஒன்று சொல்லிவிட்டால் அதுவே அவனுக்கு வேதவாக்கு ஆகிடும். சிறு வயதில் இருந்தே அவன் மாமாதான் அவனுக்கு INSPIRATION. அப்பா இல்லாத காரணத்தால் தனது மாமாவிடம் மிகுந்த பாசம் வைத்து வளர்ந்து வந்தான். அதனால் தான் பிர்லாவின் அம்மா செல்வி எல்லா காரியத்தையும் தனது தம்பி சேதுபதி மூலம் சாதித்து கொள்வாள். ஆனால் நீங்கள் நினைக்கும் படி சேதுபதி அவ்வளவு நல்லவன் கிடையாது, சேதுபதி முரட்டு குணம் படைத்தவன், யாரை கண்டும் அஞ்சாதவன், பேசும் முன் அடித்துவிட்டுத்தான் பேசும் பழக்கம் உடையவன். பல முறை கடத்தல் வழக்கில் சிறை சென்று வந்தவன். ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமாரை கட்சி பொதுக்கூட்டத்திலே கையை வெட்டியதால் ஐந்தாண்டு சிறையில் இருந்து வந்து விட்டு இப்போது சூளைமேடு பகுதியில் ரியல் எஸ்டேட் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். செல்வமும், பிர்லாவும் தனது மாமாவை சந்திக்க அவர் கடைக்கு சென்றிருந்தனர், அங்கு பிர்லாவின் மாமா சேதுபதி இல்லாததால் கடையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான். அப்போது திநகர் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றப்படுவதாக செய்தி ஓடி கொண்டு இருப்பதை கண்டு செல்வமும் பிர்லாவும் அதிர்ச்சி அடைந்தனர். அந்நேரம் சேதுபதி கடைக்கு வந்தடைந்தான். தனது மாமாவை கண்டதும் என்ன மாமா அம்மா நீ வர சொன்னேன்னு சொல்லுச்சு என்றதும், ஆமாட எதுக்கு இப்போ காலேஜ் போக மாட்டேன்னு ஆடம் பிடிக்கிற, ஒரு டிகிரி வாங்கின நாளைக்கு அது சோறு போடும்ல, அப்படியே காலேஜ்யில் நல்ல பொண்ணா பாத்து லவ் பண்ணி செட்டில் ஆகிடுடா என்றதும். ஏன் மாமா என்ன மாட்டிவிட பார்க்குற நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா என்றதும். அடேய் மருமவனே காதல் அழகானது அது உனக்கு வரும் போதுதான் புரியும் அந்த உணர்வு என்றதும் ஆமா இவரு காதல் கல்யாணம் பண்ணி பத்து புள்ளைங்க பெத்து இருக்காரு என்று நக்கல் அடித்ததும். மாமா கல்யாணம் மட்டும்தான் பன்னலடா அதற்கு காரணம் என் பூங்கொடி என்று பழைய நினைவில் மூழ்கத்தொண்டங்கினான். பொங்கல் திருவிழா நம்ம ஊருல நடந்துட்டு இருந்துச்சு, மாமன் எப்போவும் கெத்தா சுத்திட்டு இருப்பன். அப்போ கரும்பு உடைக்கும் போட்டி நடந்துட்டு இருந்துச்சு, எல்லாரும் அஞ்சு கெட, ஆறு கெட ஒடச்சிட்டு இருந்தானுங்க அப்போ மாமா வீரத்துக்கு ஒரு டஜன் கரும்பு உடைக்கவேணா அதான் டக்குனு ஒரே அடில ஒடச்சிட்டான் ஊர்ல இருந்த அத்தனை பொட்ட புள்ளைங்க மாமன் பின்னாடி ராட்டினமா சுத்துனாங்க. அப்படியே தண்ணிய போட்டுக்கிட்டு பட்டாச கைல வெச்சி வெடிச்சிட்டு இருந்தேன் அப்போதான் ஒருத்திவந்து அளவா குடின்னு சொல்லிட்டு நெத்தியில குங்குமத்த வெச்சிட்டு போய்ட்டா. அப்புறம் மாமன் அவள ராட்டினமா சுத்த தொடங்கினேன். அவன் தான் என் உசுரா இருந்தேன். அப்படியே கொஞ்சம் மாசம் போச்சு, அப்புறம் உன் அம்மா அப்பாவை கூட்டிட்டு பொண்ணு கேட்கலாம்னு போனேன். ஆனா அங்க மணமகளா இருக்க வேண்டியவ பிணமா தூங்கிட்டு இருந்தா, எனக்கு ஒன்னும் புரியல, ஏதோ பாம்பு அவ தூங்கும்போது கொத்தி இருக்கு மகராசி தூக்கத்துலையே உயிர் பிரிஞ்சிடுச்சுனு பேசிக்கிட்டாங்க. அப்புறம் மாமா பூங்கொடி ஞாபகமாவே வாழ்ந்திட்டு வரேன் என்றதும் கண்கலங்கிய சேதுபதியை கட்டி தழுவி சமாதானம் படுத்தினான் பிர்லா. சரி மாமா நீ சொல்றேன்னு கேக்குறேன் நான் நாளைக்கே அட்மிஷன் வேலைய பாக்குறேன் என்று சொல்லிவிட்டு பிர்லாவும் சீனுவும் வீடு திரும்பினார். கல்லூரியின் முதல் நாள், வாசலில் சீனியர்கள் ராக்கிங் செய்து கொண்டுயிருக்க பிர்லாவும் செல்வமும்
0 comments:
Post a Comment